நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது

நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது

நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியுள்ளது.

காத்மாண்டு:

கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் நேபாளத்தில் மொத்தம் 22,592 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை 73 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக டாஷ்போர்டு தெரிவித்துள்ளது.

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அந்நாட்டுக்கு 10 வென்டிலேட்டர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது இதன் மதிப்பு ரூ.2.8 கோடி ஆகும்

இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா வென்டிலேட்டர்களை வழங்க, நேபாள ராணுவ தலைமை அதிகாரி பூர்ண சந்திர தபா பெற்றுக் கொண்டார்.

இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan