இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 871 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 62,064 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று கடந்த 24 மணி நேரத்தில் 53,601 ஆக குறைந்துள்ளது. நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். இன்று பலி எண்ணிக்கை 871 ஆக குறைந்துள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,68,675 ஆக உயர்ந்துள்ளது. 15,83,489 பேர் குணமடைந்துள்ள நிலையில், 45,257 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் சதவீதம் 69.80 ஆக உள்ள நிலையில், 28.21 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar