Press "Enter" to skip to content

எடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்!

இலக்கை நிர்ணயித்துவிட்டு

களத்தை சந்திப்போம்;

எடப்பாடியாரை முன்னிறுத்தி
தளம் அமைப்போம்.
களம் காண்போம்;
வெள்ளி கொள்வோம்;
2021-ம் நமதே

என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்சனைக்கு முதல்வரும், துணை முதல்வரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தலுக்கு பின் முதல்வரை தேர்வு செய்தால் பிரச்சனை வரும். குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எம்எல்ஏக்கள் ஒன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று கூறி இருந்த நிலையில், அவரது கருத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »