Press "Enter" to skip to content

அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை:

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

* தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

* 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆக.24ந்தேதி முதல் தொடங்கப்படும்.

* 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை.

* கொரோனா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்திமே இல்லை. கொரோனா தாக்கம் குறைந்தபின்னரே பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »