புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கை உருவாக்கம் – பிரதமர் மோடி

புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கை உருவாக்கம் – பிரதமர் மோடி

மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக்கல்வி பற்றிய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள கல்விக்கொள்கை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

புதுடெல்லி:

‘21ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி’ என்ற தலைப்பில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக்கல்வி பற்றிய இரண்டு நாள் மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம்.

புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும். கல்விக்கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம்.

புதிய கல்விக் கொள்கையால் பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும். இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது. குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும். எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள கல்விக்கொள்கை வாய்ப்புகளை உருவாக்கும். மாணவர்களின் உள்ளம், அறிவை அறிவியல் பூர்வமாக வளர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan