மேற்கு வங்காளத்தில்  இன்று மேலும் 3,211 பேருக்கு தொற்று

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு தொற்று

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,05,919 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 58 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 4,003 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 3,084  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,78,223 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 23,694  பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan