இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு ரூ. 84.57 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.77.91 க்கும் விற்பனை செய்யப்படுகிறது

சென்னை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், கல்லெண்ணெய், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 
 நாடு முழுவதும், கொரோனா பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, கல்லெண்ணெய், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று கல்லெண்ணெய் லிட்டர் 84.72 ரூபாய், டீசல் லிட்டர் 78.12 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று கல்லெண்ணெய் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.84.57 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து ரூ.77.91க்கும் விற்பனை  செய்யப்படுகிறது

இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan