13 மாணவர்கள் மரணத்துக்கு திமுகதான் காரணம்- முதலமைச்சர்

13 மாணவர்கள் மரணத்துக்கு திமுகதான் காரணம்- முதலமைச்சர்

நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை:

சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் கூறியதாவது:

நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள்.

காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக.

நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம் என்று முதலமைச்சர் ஆவேசமாக கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan