நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான்: மு.க. ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான்: மு.க. ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான் என்று திமுக முப்பெரும் விழாவின்போது முக ஸ்டாலின் பேசினார்.

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் முப்பெரும் விழா பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் சுா. ராஜகோபாலுக்கு பேராசிரியர் விருது வழங்கி சிறப்பித்தார்.

அ.தமிழரசிக்கு பாவேந்தர் விருது வழங்கி சிறப்பித்தார். எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கு கலைஞர் விருது வழங்கி சிறப்பித்தார். அ. ராமசாமிக்கு அண்ணா விருது வழங்கி சிறப்பித்தார். மா. மீனாட்சிசுந்தரத்திற்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.

பின்னர் பேசிய மு.க. ஸ்டாலின் ‘‘நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான். வெட்டி வா என்றால் கட்டி வருபவர்கள் திமுகவினர். நாடே சொல்கிறது, நாட்டு மக்களே சொல்கிறார்கள். 7 மாதத்தில் திமுக ஆட்சிதான்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan