தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்- மாநிலங்களவையில் சிவ சேனா அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்- மாநிலங்களவையில் சிவ சேனா அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று பூஜ்யம் அவரில் விவாதிக்க கோரி சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் அறிவிப்பு கொடுத்துள்ளார்.

புதுடெல்லி:

ஜவகர்லால் நேரு போர்ட் உடைடின் துறைமுகங்களை தனியார்மயமாக்கும் திட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று பூஜ்யம் அவரில் விவாதிக்க கோரி சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் அறிவிப்பு கொடுத்துள்ளார். 

இதேபோல் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிடிபி எம்பி நசீர் அகமது அளித்துள்ள நோட்டீசில், எம்.பி.எல்.ஏ.டி நிதி மற்றும் ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் மோசமான நிலை குறித்து பூஜ்யம் அவரில் விவாதிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

பகுஜன் சமாஜ் எம்பி வீர் சிங் அளித்துள்ள  நோட்டீசில், ஊரடங்கு மற்றும் கொரோனா பெருந்தொற்றால் வேலையின்மை அதிகரித்திருப்பது பற்றி விவாதிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan