வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின் – முதலமைச்சர் பழனிசாமி

வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின் – முதலமைச்சர் பழனிசாமி

வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் முக ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. தமிழகத்தில்தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.

தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ஒட்டியே இந்த சட்டமும் உள்ளது.

நான் எப்போதுமே விவசாயி தான். வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan