பஞ்சாப் 11 சுற்றில் 95/1: ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்குமா?

பஞ்சாப் 11 சுற்றில் 95/1: ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்குமா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 11 சுற்றில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஆர்சிபி அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மட்டையாட்டம் செய்து வருகிறது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் மயங்க் அகர்வால் சற்று தடுமாறினார்.

பவர் பிளே-யில் பஞ்சாப் அணி மட்டையிலக்கு இழப்பின்றி 50 ஓட்டங்கள் சேர்த்தது. 6-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மயங்க் அகர்வால் 20 பந்தில் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அடுத்து நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை உடனடியாக தொடங்கவில்லை. 10-வது சுற்றில் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்சருன் 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்க பஞ்சாப் அணி 10 சுற்றில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 90 ஓட்டங்கள் எடுத்தது.

11 சுற்றில் 96 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கைவசம் இன்னும் 9 மட்டையிலக்கு உள்ள நிலையில் 54 பந்தில் 80 ரன்களுக்கு மேல் அடித்தால், ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan