4 ரன்னுக்குள் 3 மட்டையிலக்கு: 57 ரன்னுக்குள் 5 மட்டையிலக்கு- ஆர்சிபி திணறல்

4 ரன்னுக்குள் 3 மட்டையிலக்கு: 57 ரன்னுக்குள் 5 மட்டையிலக்கு- ஆர்சிபி திணறல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 57 ஓட்டங்கள் எடுப்பதற்குள் ஐந்து முக்கிய மட்டையிலக்குடுகளை இழந்து திணறி வருகிறது.

ஐபிஎல் 6-வது போட்டியில் பஞ்சாப் – பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் மட்டையாட்டம் செய்த பஞ்சாப்  கேஎல் ராகுலில் (69 பந்தில் 132 ரன்) அபார சதத்தால் 20 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 206 ஓட்டங்கள் குவித்தது,

பின்னர் 207 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் – ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது. முதல் ஓவரை காட்ரெல் வீசினார். ஓவரின் 4-வது பந்தில் படிக்கல் 1 ஓட்டத்தை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்காமல் ஜோஷ் பிலிப்பை களம் இறக்கினார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் 2-வது ஓவரின 3-வது பந்தில் ஓட்டத்தை ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 மட்டையிலக்குடுகளை இழந்தது. 4-வது மட்டையிலக்குடுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.5 சுற்றில் 53 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில டி வில்லியர்ஸ் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

ஆர்சிபி 8.2 ஓவர் முடிவில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்து திணறி வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan