உக்ரைனில் ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 22 பேர் உடல் கருகி பலி

உக்ரைனில் ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 22 பேர் உடல் கருகி பலி

உக்ரைன் நாட்டில் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கீவ்:

உக்ரைன் நாட்டின் ராணுவ விமானம் ஒன்றில் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தனர். ராணுவ விமான தளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. 

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் உக்ரைனில் ஏற்பட்ட விமான விபத்தில் 176 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan