ஐ.நா. சபையில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்

ஐ.நா. சபையில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்

உலக தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

நியூயார்க் :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 74-வது கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மேலும், ஐ.நா. பொது சபை உருவாக்கப்பட்ட 75-வது ஆண்டு சிறப்பு அமர்விலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan