குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்- முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்- முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை:

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளையொட்டி மலர்க்கொத்துடன் முதலமைச்சர் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

அதில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டிற்கு மேலும் சேவையாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பிறந்தநாளுக்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan