கொரோனாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி

கொரோனாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி

மேற்கு வங்காள இந்துஸ் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குருபாத மீட்டி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் பங்குரா மாவட்டம் இந்துஸ் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 2-வது தடவையாக பணியாற்றி வந்தவர், குருபாத மீட்டி.

அவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 51.

குருபாத மீட்டி, இருதய மற்றும் சிறுநீரக கோளாறுகளாலும் அவதிப்பட்டு வந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan