7.5 சதவீத உள்ஒதுக்கீடு: ஒரு மாதம் ஆகியும் ஆளுநர்  முடிவு எடுக்காதது ஏன்?- கோர்ட் கேள்வி

7.5 சதவீத உள்ஒதுக்கீடு: ஒரு மாதம் ஆகியும் ஆளுநர் முடிவு எடுக்காதது ஏன்?- கோர்ட் கேள்வி

கடந்த மாதம் 15-ந்தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பியும், இன்னும் ஆளுநர் முடிவு எடுக்காதது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்த பின் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவர் கனவு தகர்ந்து போனது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும், நீட் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை.

இதனால் 0.1 சதவீத மாணவர்களே மருத்துவ படிப்புக்கு சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்றியது.

கடந்த மாதம் 15-ந்தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு சென்றது. ஒரு மாதம் ஆகியும் இன்னும் ஆளுநர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் நாளைமறுதினம் நீட் தேர்வு முடிவு வருகிறது.

ஆளுநர் காலவிரயம் செய்வதால் இந்த கல்வி ஆண்டில் அரசு மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் தெரப்பில் அவருடைய செயலர் இன்னும் இரண்டு வார அவகாசம் வேண்டும் என கேட்டார்.

அதற்கு நீதிபதிகள் ‘‘செப்டம்பர் 15-ந்தேதி மசோதா அனுப்பப்பட்டு இன்னும் முடிவு எடுக்காதது ஏன்?. காலவிரயம் காரணமாக சாதாரண மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? நாளை மறுநாளுக்குள் அளுநர் செயலரிடம் கேட்டு அரசு பதில் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan