தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர்  ஆட்சியா?- ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியா?- ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, ஆளுநர் ஆட்சியா? என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும்
இன்னும் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல. திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம். சட்டசபையில்
நிறைவேற்றப்பட்ட சட்டங்களை கவர்னரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன தான் மரியாதை?
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, ஆளுநர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan