கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,184 பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,184 பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,184 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 7,184 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,58,574 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 71  பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,427 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 8,893  பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,37,481 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1.10,647 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  940 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan