3 நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை வயநாடு வருகை

3 நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை வயநாடு வருகை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார்.

புதுடெல்லி:

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சென்றடைகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்லும் ராகுல்காந்தி அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வயநாடு செல்லும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

பின்னர் 21-ந் தேதி மனந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிடுகிறார். இதையடுத்து கண்ணூர் விமான நிலையம் செல்லும் ராகுல்காந்தி அங்கிருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan