ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குருவுடன் சந்திப்பு

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குருவுடன் சந்திப்பு

அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக சத்குரு அந்நாட்டில் மோட்டார் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளார்.

கோவை:

அமெரிக்காவில் மோட்டார் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் போது ஸ்மித்தின் குடும்பத்தினருடனும் சத்குரு கலந்துரையாடினார்.

இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வில் ஸ்மித், உங்களுடனும் உங்கள் அற்புதமான குடும்பத்துடனும் நேரம் செலவழித்தது மகிழ்ச்சி. உங்கள் சமூகம் உறுதியாக இருக்கட்டும், தர்மம் உங்கள் வழிகாட்டியாக இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக சத்குரு அந்நாட்டில் மோட்டார் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுமார் 16 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தை அவர் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கினார். மிசிசிப்பி, இல்லினாய்ஸ், மிசவ்ரி, நியூ மெக்ஸிகோ, கொலராரோ உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு அவர் பயணிக்க உள்ளார்.

தனது பயணத்தின் போது அமெரிக்க பூர்வ குடிமக்களின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரில் பார்வையிட்டு வருகிறார். மேலும், பூர்வகுடி மக்களின் தலைவர்கள், பிரபலங்கள், மற்றும் குடிமக்களுடன் சத்குரு கலந்துரையாடி வருகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan