பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பிரம்மாண்ட பேரணி நடத்தின.

கராச்சி:

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தன. 

ந்த இயக்கத்தின் மூலம் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இறுதியாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், கராச்சி நகரில் 11 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்காண ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 16 ஆம் தேதி குஜிர்ன்வாலா நகரில் இதேபோன்றதொரு பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தின. 

பேரணியின் இறுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்து கொண்டு உரையாற்றினார். இம்ரான் கானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பிலாவல் பூட்டோ சர்தாரி முன்வைத்தார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan