அரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிசாமி கூறியதாவது, 

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். ரூ. 700 கோடி மதிப்பிலான காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan