3-க்குள் 4, 30 ரன்னுக்குள் 6 மட்டையிலக்கு: சீட்டுக்கட்டாய் சரிந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்

3-க்குள் 4, 30 ரன்னுக்குள் 6 மட்டையிலக்கு: சீட்டுக்கட்டாய் சரிந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்

அம்பதி ராயுடு, டு பிளிஸ்சிஸ், ஜெகதீசன், ருத்துராஜ் கெய்க்வாட், ஜடேஜா அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் திணறி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அம்பதி ராயுடு பும்ரா வீசிய அடுத்த ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 2 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார். அடுத்து வந்த ஜெகதீசன் முதல் பந்திலேயே நடையை கட்டினார். இதனால் 3 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மூன்று மட்டையிலக்குடுகளை இழந்தது.

4-வது மட்டையிலக்குடுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். 3-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 1 ஓட்டத்தை எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு மட்டையிலக்குடுகளை இழந்திருந்தது.

5-வது மட்டையிலக்குடுக்கு எம்எஸ் டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். பும்ரா வீசிய 4-வது சுற்றில் சென்னை அணிக்கு 3 பவுண்டரி கிடைத்தது. 6-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜா 7 ஓட்டத்தை எடுத்த நிலையில் ஜடேஜா வெளியேறினார்.

6-வது மட்டையிலக்குடுக்கு டோனியுடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ஓவர்களில் 24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் ஐந்து மட்டையிலக்குடுகளை இழந்து திணறியது.

7-வது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய டோனி, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டோனி 16 ஓட்டத்தில் ஆட்டமிழக்க சென்னை 6.4 சுற்றில் 30 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 மட்டையிலக்குடுக்களை இழந்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan