பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய காணொளி: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய காணொளி: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கிடையில் பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வத்தாமன் கணினிமய மூலம் புகார் அளித்தார்.

இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய காணொளி காரணமாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்ததன் மூலம நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan