தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பெரம்பலூர்:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சங்க மாநில
பொதுச்செயலாளர் முகமது அலி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆவின் நிறுவனம் 3 மாதங்களாக பால்
உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ.500 கோடி பாக்கி வைத்துள்ளது. அதை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பால் வழங்கியுள்ளவர்கள் அனைவருக்கும் கூடுதலான, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனங்களை வழங்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையில்
லிட்டருக்கு ரூ.5 ஊக்க தொகையாக கூடுதலாக வழங்க வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும், ஆவின்
அலுவலகம் முன்பாகவும் பால் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan