மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா

மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா

மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மும்பை:

மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பவாருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அஜித்பவார், “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளேன். எனது உடல்நலம் குறித்து ஆதரவாளர்கள், மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். சில நாள் ஓய்வுக்கு பிறகு மக்கள் பணியை தொடருவேன்” என்றார்.

மராட்டியத்தில் ஏற்கனவே 14 மந்திரிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan