பா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது

பா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாமல்லபுரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர்.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது சிதம்பரம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து சிதம்பரத்தில் பா.ஜனதா நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல் துறையினர் முட்டுக்காடு அருகே கைது செய்தனர்.

மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான காவல் துறையினர் குஷ்புவை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan