உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.58 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.58 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.58 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.32 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களில் 11.46 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan