விடுதலையை மறுப்பது அநீதி- அற்புதம்மாள்

விடுதலையை மறுப்பது அநீதி- அற்புதம்மாள்

சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார்.

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ‘வெளியீடு பேர‌றிவாளன்’ என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

‘சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி’ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் டுவிட் செய்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan