அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்- ஓ பன்னீர்செல்வம் பேச்சு

அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்- ஓ பன்னீர்செல்வம் பேச்சு

சட்டசபை தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

சென்னை:

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,

2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம் என்றார். 

இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan