பிரிட்டனை விரட்டும் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

பிரிட்டனை விரட்டும் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது.

லண்டன்:

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 5 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. 13 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 7-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 18 ஆயிரத்து 662 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்து 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது 

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக அங்கு 398 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan