முலாயம் சிங் 82-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – பிரதமர் மோடி வாழ்த்து

முலாயம் சிங் 82-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – பிரதமர் மோடி வாழ்த்து

சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் 82-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

லக்னோ:

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத்தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் தனது 82-வது பிறந்த நாளை நேற்று எளிமையாக கொண்டாடினார். அவருக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

முலாயம் சிங் யாதவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் குடும்பத்துடன் தனது தந்தையை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் முலாயம் சிங்கின் சகோதரரும், பிரகத்சீத் சமாஜ்வாடி கட்சி லோகியாவின் தலைவருமான சிவ்பால் சிங் யாதவும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. லக்னோ முழுவதும் முலாயம் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

பிரதமர் நரேந்திரமோடி, முலாயம் சிங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் ஆர்வமுள்ள நம் நாட்டின் மூத்த மற்றும் அனுபவமுள்ள தலைவர்களில் ஒருவர், அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்வுக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan