ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஜெய்ப்பூர்:

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 163 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 லட்சத்து 43 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறைமந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்-மந்திரி அசோக் கெலாட், ரகு சர்மா விரைவில்குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan