2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும்  – மாடர்னா நிறுவனம் நம்பிக்கை

2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் – மாடர்னா நிறுவனம் நம்பிக்கை

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரசை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது.

இதற்கிடையே, மாடர்னா நிறுவன தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், 2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் என மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் கூறுகையில், 2021-ம் ஆண்டின் இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க முடியும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan