குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து- தமிழக அரசு

குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து- தமிழக அரசு

கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* மூத்த குடிமக்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் குடியரசு தின விழாவை காண வருவதை தவிர்க்க வேண்டும்.

* குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan