தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றுகொண்டவர் அண்ணா- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றுகொண்டவர் அண்ணா- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன் அண்ணா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சென்னை:

அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன்.

நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan