அசாமில் பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு – கட்டிடங்கள் இடிந்து நாசம்

அசாமில் பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு – கட்டிடங்கள் இடிந்து நாசம்

அசாம் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் நடந்த குண்டுவெடிப்பால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

கவுகாத்தி:

அசாமில் மிசோரம் எல்லையை ஒட்டியுள்ள கைலகத்தி மாவட்டம் ராம்நாத்பூரில் உள்ள ஒரு தொடக்க பள்ளிக்கூடத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் குடிநீர் தொட்டியும், கழிவறை கட்டிடமும் இடிந்து தரைமட்டமாகின.

தகவல் அறிந்த மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு பபிந்திரகுமார் நாத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் வெடிகுண்டு நடந்த இடத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாசவேலையில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan