சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.

சென்னை:

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

14-வது ஐ.பி.எல். பருவம் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள்  பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன்  முடிவுற்றது. பதிவு செய்துள்ள 283 வெளிநாட்டு வீரர்கள் விவரம்  பின்வருமாறு:

மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள், ஆஸ்திரேலியா – 42 வீரர்கள், தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், இங்கிலாந்து – 21 வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள், நேபாளம் – 8 வீரர்கள், ஸ்காட்லாந்து- 7 வீரர்கள், வங்காளதேசம் – 5 வீரர்கள், அயர்லாந்து – 2 வீரர்கள், அமெரிக்கா –  2 வீரர்கள், ஜிம்பாப்வே- 2 வீரர்கள், நெதர்லாந்து – 1 வீரர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan