இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – 39 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – 39 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை39 லட்சத்தைத் தாண்டியது.

லண்டன்:

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் மேலும் 19,114 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39,11,573 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்பால் 1,014 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 18.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan