சசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்

சசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்

ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது.

ஓசூர்:

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார். சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினர்.

அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்புகிறார்.

சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப்பகுதி அருகே வேறு காருக்கு மாறினார். வேறு காருக்கு மாறிய நிலையில் அவர் முன்பு வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தடைந்த சசிகலாவிற்கு அமமுக. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக கொடியுடன் தான் பயணிப்போம் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். காவல் துறை அறிவிப்பு அளித்தால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan