தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: அடக்கு முறைக்கு என்றும் அடிபணியமாட்டேன்: சசிகலா

தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: அடக்கு முறைக்கு என்றும் அடிபணியமாட்டேன்: சசிகலா

கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன், அடக்கு முறைக்கு என்றும் அடிபணியமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா சென்னை வந்து கொண்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தொண்டர்கள் மத்தியில் அன்புக்கு நான் அடிமை என்ற பாடலை மேற்கொள் காட்டி சசிகலா பேசினார்.

அப்போது “விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்” என்றார்.

பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா? எனக் கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan