ஒரே அணியாக செயல்படுவோம்: மவுனம் கலைத்த சசிகலா

ஒரே அணியாக செயல்படுவோம்: மவுனம் கலைத்த சசிகலா

பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி கொண்டிருக்கும் சசிகலா, அதிமுக-வின் பொது எதிரி ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார். சிறையில் இருந்து விடுதலையான பின், முதன்முறையாக மவுனம் கலைத்து இன்று பேட்டிளியத்தார்.

அப்போது சசிகலா கூறியதாவது:-

* தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை.

* தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.

* விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன்.

* ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். 

* அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை.

* தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை.

* ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்

* அதிமுக பொது எதிரி் ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம்

* அதிமுக முன்னேற்றத்திற்காக எனது வாழ்நாளை அர்ப்பணிப்பேன்

இவ்வாறு சசிகலா கூறினார்.

மேலும், அதிமுக அலுவலகத்திற்கு செல்வது குறித்து கேட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan