பிரேசிலை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தைக் கடந்தது

பிரேசிலை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தைக் கடந்தது

பிரேசில் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைக் கடந்துள்ளது.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,31,561 ஆக உள்ளது. 

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 84 லட்சத்தை நெருங்குகிறது. சுமார் 8.95 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan