கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்துக்கு இங்கிலாந்து குழு வருகை

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்துக்கு இங்கிலாந்து குழு வருகை

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்துக்கு இங்கிலாந்து குழுவினர் நேற்று வருகை தந்தனர்.

புனே:

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்துக்கு இங்கிலாந்து நாட்டின் சர்வதேச வர்த்தகத்துக்கான அரசு செயலாளர் லிஸ் டிராஸ் தலைமையிலான குழுவினர் நேற்று வருகை தந்தனர்.

இதுதொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா வௌியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துக்கான அரசு செயலாளர் லிஸ் டிராசும், குழுவினரும் எங்கள் தலைமையகத்துக்கு வருகை தந்தது, எங்களுக்கு கிடைத்த கவுரவம்.

சுகாதாரத்துறை கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியா-இங்கிலாந்து இடையில் நிலவும் உறவை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது என நாங்கள் விவாதித்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan