ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் உள்ளது – ராகுல்காந்தி கருத்து

ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் உள்ளது – ராகுல்காந்தி கருத்து

ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் இருக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

உத்தரகாண்ட் மாநில வெள்ளப்பெருக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு நிவாரண பணிகள் எந்த இடையூறும் இன்றி நடக்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியமான விஷயம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன். அவர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan