உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது – அமித்ஷா

உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது – அமித்ஷா

இந்தியாவிலிருந்து 14 நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்படுகிறது என உள்துறை மந்திரி தெரிவித்தார்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் கன்காவ்லியில் நடந்த தனியார் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்திய அரசு கொரோனா தொற்றை திறமையாகக் கையாண்டது. நலிந்த சுகாதார கட்டமைப்பை வைத்துக் கொண்டு மிகப்பெரிய மக்கள்தொகை உள்ள ஒரு நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை ஒவ்வொருவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

தொற்றை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் திறமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஊரடங்கு, மக்களின் ஊரடங்கு போன்றவை ஊக்கமாக அமைந்தது.

கடந்த 21 நாட்களில் நாட்டில் 55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை பூர்த்தி செய்ய இந்தியா தயாராகி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பு மருந்துகள் 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் 4 தடுப்பு மருந்துகள் விரைவில் தயாராக உள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர் மற்றும் 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்கொண்டனர். நமது நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, சிவசேனாவுக்கு முதல் மந்திரி பதவியில் பங்கு தருவதாக எந்த உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்கவில்லை. நாங்கள் பச்சை பொய்களை பேசுவதில்லை. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள்.

ஆட்சி அதிகாரத்தின் மீது இருந்த இச்சை காரணமாக பால் தாக்கரேவின் எல்லா கொள்கைகளும் தபதி ஆற்றில் போடப்பட்டது. பா.ஜ.க. கொள்கைக்காக அரசியல் செய்கிறது. சிவசேனா போல அரசியல் செய்வதில்லை என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan