கேரளாவில் டியூசன் மையத்தில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா

கேரளாவில் டியூசன் மையத்தில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா

கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூசன் மையத்தில் படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூசன் மையத்தில் படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அந்த டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த மாணவர்கள் மாரஞ்ச்சேரின் பொன்னானி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். எனவே அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுதவிர அந்த டியூசன் மையத்தில் படித்த மற்ற பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 190 மாணவர்கள் மற்றும் 79 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. டியூசன் மையம் மூலமே கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, கொரேனா பரவலுக்கு காரணமான டியூசன் மையம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படித்த பள்ளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan