மக்களவையில் பிரதமர் மோடி உரை- காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு

மக்களவையில் பிரதமர் மோடி உரை- காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு

மக்களவையில் இன்று பிரதமர் மோடி உரையாற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் பேசினார்கள். 

இந்நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மிதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். 

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மோடி பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பிரதமரின் உரையை புறக்கணித்து காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் பிரதமர் தனது உரையை தொடர்ந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan